சென்னை
பட்டியலின மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுகவினர்

திமுகவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என தலைமை கழகம் அறிவித்ததையடுத்து பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மணிமாறன் தலைமையில் திருமழிசையில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பட்டியல் இன மக்களை குறித்து அவதூறாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து பதாகைகள் ஏந்தி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜாவித் திருமழிசை பேரூர் கழக செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





