ஆவின்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு விழா

திருத்தணிஅடுத்த.ஆர்.கே
பேட்டை ராஜாநகரம் பகுதியில் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட ஆவின்பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு விழா*
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே ராஜாநகரம் பகுதியில் பால் சொசைட்டி திறக்க வேண்டும் என்று கிராமமக்கள் மாவட்ட ஆவின் தலைவர் வேலஞ்சேரி த. சந்திரன் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந் நிலையில் காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட ஆவின் நிறுவனம் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் தலைமை வகித்தார். பொது மேலாளர் ஏ.பி. நடராஜன், துணை பதிவாளர் ஸ்ரீகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் பங்கேற்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பெயர் பலகை திறந்துவைத்தும், பால் கொள்முதல் செய்தும், சங்கத்தை தொடங்கிவைத்தார். பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை ஏற்று பால் சொசைட்டி திறக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடை வளர்போர் பயன்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டாலின் , கலைச்செல்வி மற்றும் ஆவின் அதிகாரிகள் உதவி பொது மேலாளர் லிடியா, உமாசங்கர்,அனிஷ்,கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ்வரலு, பசும்பொன் ராஜா,மற்றும் விரிவாக்க அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்


