திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், கூட்டமைப்பின் மாவட்ட தலைவராக எம்.சுமிதா சுந்தர், மாவட்ட செயலாளராக 87, சதா பாஸ்கரன், பொருளாளராக ஜி.சிட்டி கிருஷ்ணநாயுடு, மாநில செயற்குழு உறுப்பினராக ஜெ.கோவர்த்தனம், துணைத் தலைவர்களாக ஆர்.சத்யநாராயணன், எஸ்.ரமணி சீனிவாசன், துணை செயலாளர்களாக டி.அருள்முருகன், ஆர்.புவனேஸ்வரி ரவி, மாவட்ட இணைச் செயலாளராக எல்.சுகந்திராணி லிங்கன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர் எம்.சுமிதா சுந்தர் தலைமையில், மாவட்ட செயலாளர் சதா பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு, 14 மற்றும் 15 வது நிதிக்குழு குழு மானியம், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ். திட்டப்பணி, ஜல் ஜீவன் மிஷின் திட்டப்பணி ஆகிய திட்டப் பணிகளை மாவட்டம் முகமையின் மூலம் தேர்வு செய்வதையும், ஒப்பந்தப்புள்ளிகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே நடத்தப்படுவதையும் மாற்றி திட்டப் பணிகளை தேர்வு செய்வதையும், ஒப்பந்தப்புள்ளி கோருவதையும் ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கக் கோரியும், 1994 ஆம் ஆண்டு ஊராட்சிகள் சட்ட திட்டத்தை மீறுவதாக கூறி ஊராட்சி தலைவர்கள் அதிகாரத்தை பறிப்பதாக உள்ளது. எனவே இந்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் கைவிடக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


