சினிமா

ஏமாற்றப்பட்டுவிட்டேன்.. நடிகர் சூரி பகீர் தகவல்!

சென்னை: பாதையில்லாத இடத்தை, தவறான ஒப்பந்தம் மூலம் வாங்கி ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று நடிகர் சூரி கூறியுள்ளார். நடிகர் சூரி, நிலம் வாங்கி தருவதாகக் கூறி, 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

‘வீர தீர சூரன்’ படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது இந்த புகாரை அவர் கொடுத்திருந்தார்.

சிறுசேரியில் நிலம் வீரதீர சூரன் படத்தில் நடிக்க, சூரிக்கு ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டு இருந்தது. அதை படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா ஆகியோர் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகர் சூரிக்கு சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாகவும் ரூ.40 லட்சத்தை அதில் கழித்துவிட்டு, பாக்கி பணத்தை தந்தால் போதும் என கூறியுள்ளனர்.

ஆவணங்கள் இல்லை அதன்படி ரூ. 3.15 கோடி வரை சூரி கொடுத்தாராம். நிலம் வாங்கிய பிறகு அதற்கு சரியான ஆவணங்கள் இல்லை, பாதை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரி, பணத்தைத் திருப்பி கேட்டுள்ளார். அதில் குறிப்பிட்ட தொகையை மட்டும் கொடுத்துள்ளனர். ரூ.2.70 கோடி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

விஷ்ணு விஷால் இதையடுத்து நடிகர் சூரி, அன்புவேல் ராஜன், ரமேஷ் குடவாலா மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ரமேஷ் குடவாலாவின் மகனும் நடிகருமான விஷ்ணு விஷால் மறுத்திருந்தார். இந்நிலையில் இதுபற்றி சூரி கூறியிருப்பதாவது: நான் மோசடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதனால் மன உளைச்சலில் இருக்கிறேன்.

நம்பிக்கை இழந்தேன் இதுபற்றி வெளியே எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறி, பணத்தை திருப்பி அளிப்பதாக அவர்கள் சொன்னார்கள். 2015 முதல் 2017 வரை பொறுமையாக இருந்தேன். பிறகும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை. நம்பிக்கை இழந்தேன். பாதையில்லாத இடத்தை தவறான ஒப்பந்தம் மூலமாக வாங்கி ஏமாற்றப்பட்டு விட்டேன்.

கடவுளை நம்பினேன் என் திறமை எல்லாவற்றையும் தொலைத்து விட்டேன். 5 வருடங்களாக கஷ்டப்படுகிறேன். கடவுளை நம்பினேன். நல்ல முடிவு கிடைக்கவில்லை. இப்போது நீதிமன்றத்தை நம்புகிறேன். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. இவ்வாறு நடிகர் சூரி கூறினார்.

Show More
Back to top button