மாநிலம்

பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காயம்

பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் ரூ.45-க்கு வெங்காயம்: தமிழகம் முழுவதும் இன்று முதல் விற்பனை தொடக்கம்!

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநிலங்களில் கனமழையால் வெங்காய வரத்து குறைந்து தமிழகத்தல் வெங்கயத்தின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பெரிய வெங்காயம் கிலோ ரூ.120க்கும் மேலாக விற்கப்படுகிறது. இதையடுத்து வெங்காய விலையுர்வை கட்டுப்படுத்த நாசிக்கில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு அரசு பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்ததது. அந்த வகையில், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் நேற்று முதல் குறைவான விலையில் வெங்காய விற்பனை செய்யப்பட்டது. அதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று முதல் விற்பனை தொடங்கவுள்ளது.

இந்நிலையில், பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் வாங்கி சென்றனர். ஆனால், தரம் குறைந்த வெங்காயம் வழங்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், காய்கறிகள் வாங்கினால் மட்டுமே 3 கிலோ வெங்காயம் வழங்கப்படுவதாகவும் காய்கறிகள் வாங்காமல் இருக்கும்பட்சத்தில் ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 

Show More

Related Articles

Back to top button