சென்னை

மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக வழங்கப்பட்டது

தமிழகத்தில் வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆவடி அருகே நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக வழங்கப்பட்டது.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரேம் குமார்- வின்சி ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக முககவசம் ,சானிடைசர் போன்ற அரசு நெறிமுறைகளுடன் விழா நடைபெற்றது.
.இதில் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பாக அதன் மாநிலத் துணைத் தலைவர் ஆவடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மணமக்களுக்கு 5 கிலோ வெங்காயம் பரிசாக வழங்கப்பட்டது. திருமண விழாக்களில் தங்கம்,வெள்ளி,பணம் என விலையுயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கவது வழக்கம் தற்போது தமிழகத்தில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிலோ 80 முதல் 120 வரை விறபனை செய்யப்பட்டு வருகிறது.இதனை சுட்டிக்காட்டும் வகையில் மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக வழங்கப்பட்டது.மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…

Show More

Related Articles

Back to top button