தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்ட மக்கள் பாதை இயக்க தலைவர் நாகல்சாமியை கண்டித்து அவரது வீட்டின் முன்பு தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் பாதை பேரியக்கம் பல்வேறு நலத்திட்டங்களை சமூகத்திற்கு செய்து வந்தார்கள். அந்த வகையில் கண்ணகி நகரில் பொதுமக்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் முகக்கவசங்கள், நிவாரணப் பொருட்கள் மற்றும் ரூ.2000 ஆகியவை பத்திரிக்கையாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஏழு மாதங்களுக்குப் பிறகு பத்திரிக்கையாளர்கள் ரூ.2000 லஞ்சம் பெற்றார்கள் என்று அனைத்து பொதுத்தளங்களிலும், மக்கள் பாதை தலைவர் திரு. நாகல்சாமி பத்திரிக்கையாளர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்ட மக்கள் பாதை இயக்க தலைவர் நாகல்சாமியின் வீட்டின் முன்பு தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… மாநில துணை தலைவர் ஆவடி ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முதன்மை செயலாளர் வஜ்ஜிரவேல் பங்கேற்று இழிவாக பதிவிட்ட நாகல்சாமி மன்னிப்பு கேட்ட கோரியும் அவரை கைதுசெய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்… மேலும் பத்திரிகையாளர்களிடம் விரைவில் மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பாக போராட்டம் நடைபெறும் என தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்…..



