சென்னை

சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா

சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா

சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் அமைந்துள்ள அக்வா கார்டனில் யூனிவர்செல் பிரஸ் மீடியா எஜிகேஷன் வித்தியாபத் அமைப்பின் சார்பில் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர். ஆர்.விஜய்ஆனந்த் தலைமையில் நடை பெற்றது.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கோயம்புத்தூர் ஓய்வு பெற்ற நீதிபதி பிச்சையம்மாள், சிம்சன் நிறுவனர் கோவிந்தராஜலூ ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சமூக சேவையாற்றிவரும் 50 க்கும் மேற்பட்ட சமூக சேவகர்களுக்கு விருதினை வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர் விழா. முடிவில் அமைப்பின் பொருலாளர் ரூபன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button