சென்னை

ஆவடியின் டைடல் பார்க் தி.மு.க. போட்ட விதை தி.மு.க. வேட்பாளர் நாசர் பேட்டி

ஆவடியின் டைடல் பார்க் தி.மு.க. போட்ட விதை
தி.மு.க. வேட்பாளர் நாசர் பேட்டி

டைடல் பார்க் தி.மு.க.வின் விதை
ஆவடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் நாசர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதை ஏற்கனவே தலைவர் அறிவித்துவிட்டார். ஆட்சிக்கு வந்த உடன் ஆவடி தொகுதிக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க முழு நடவடிக்கை எடுக்கப்படும். அதைப்போல ஆவடி இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், படித்த இளைஞர்களுக்காக ஐ.ஏ.எஸ். அகாடமி உருவாக்கப்படும். ஆவடியில் தற்போது கட்டப்பட்டு உள்ள டைடல் பார்க் கடந்த 2006 -ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்த திட்டம் இது.
இதற்கு அடித்தளம் இட்டது, வித்திட்டது தி.மு.க. ஆட்சி தான். இதை அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. இந்த திட்டத்தை முன்னெடுத்து நாங்கள் திட்டமிட்டதை விட, அதில் சிறிய அளவிலான டைடல் பார்க் கட்டிடத்தை கட்டியுள்ளது. இது மட்டிமின்றி இந்த டைட்டில் பார்க் இருக்கும் இடத்தில் 56 ஏக்கர் பரப்பளவில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. பல்வேறு காரணங்களுக்காக இந்த தொழிற்சாலை பல வருடங்களுக்கு முன் மூடப்பட்டது. மூடிய நிலையிலேயே கிடந்த இந்த தொழிற்சாலையை டைடல் பார்க் அமைப்பதற்காக முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கினார்கள். பின்னர் அதில் உள்ள இரும்பு, காப்பர் உள்ளிட்ட சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான பொருட்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டது. ஆனால் அது இன்று வரை அதை யார் கொண்டு சென்றது என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இருசக்கர வாகன பேரணி
இதுபோல அந்த தொழிற்சாலையை காலி செய்யும் போது புதுக்கோட்டை சேர்ந்த ஒரு இளைஞன் விபத்தில் இறந்து விட்டான். அவனுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க அந்த இடத்தில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள டைடல் பார்க், குறைந்த அளவிலான படித்த இளைஞர்கள் வேலை பார்ப்பதற்கு மட்டுமே தகுதி உடையதாய் இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஆவடி குட்பட்ட 75 சதவீதம் படித்த இளைஞர்கள் டைடல் பார்க் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அளவுக்கு அதனுடைய தரத்தை உயர்த்துவதுடன், அதை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்புகளை கூறி தேர்தல் பரப்புரைகளை செய்து வருகிறோம். இந்த நிலையில் வருகிற 2-ந்தேதி ஆவடியில் இருந்து திருநின்றவூர் வரை இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


Show More

Related Articles

Back to top button