மாநிலம்

எம்.ஜே.அப்பாஜி அணி முதல் பரிசை தட்டிச்சென்றது

எம்.ஜே.அப்பாஜி அணி முதல் பரிசை தட்டிச்சென்றது

மைசூர் பேப்பர் மில்ஸ் நிறுவனத்தின் எஃப்சி தபனா பாய்ஸ்
அணி சார்பில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான தாலுகா அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது. போட்டியை 97-வது மத்திய அதிவிரைவு படையைச் சேர்ந்த கமாண்டர் ப்ரீதா தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி பந்தை உதைத்து தொடங்கி வைத்தார். மத்திய அதிவிரைவு படையை சேர்ந்த ஷாஜன், எம்.பி.எம்.ஐ. அணியை சேரந்த ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
20-ந்தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர்ந்து 2 நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் எம்.ஜே. அப்பாஜி அணி முதல் பரிசு பெற்றது.

இந்த அணிக்கு ரூ 5 ஆயிரம் மற்றும் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் பரிசை மத்திய அதிவிரைவு படையினர் தட்டிச் சென்றனர். இவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிவிரைவு படையின் கமாண்டர் எரிக் கில்பர்ட் ஜோஸ் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். இந்த கால்பந்து போட்டியை மைசூர் பேப்பர் மில்ஸ்சின் எஃப்சி தபனா பாய்ஸ் அணியை சேர்ந்த பூதீப், அந்தோணி, ரமேஷ், சாகர், சுனில், நாகேஷ், ரகு, பிரபாஷ், கரண், ரவிக்குமார், வினோத்குமார், ராம், நரசிம்மா, ரமேஷ் குமார் உள்ளிட்டவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Show More

Related Articles

Back to top button