மாநிலம்

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை!! லாக்டவுன் அறிவிப்பு வருமா?!!

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை!! லாக்டவுன் அறிவிப்பு வருமா?!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலியில் ஆலோசனை நடத்துகிறார்.

தற்போதைய கணக்குபடி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

மராட்டியம், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்படியிருக்க இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

ஏற்கனவே 6-ம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்றைய பிரதமரின் காணொளி லாக்டவுனை மையப்படுத்தியே இருக்கும் என கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button