திண்டுக்கல்

அனுமதியின்றி கூட்டம் நடத்தும் தனியார் கடன் நிறுவனத்தினர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா நோய் பரப்பும் விதமாக அனுமதியின்றி கூட்டம் நடத்தும் தனியார் கடன் நிறுவனத்தினர்,
அதிக வட்டி கட்டச்சொல்லி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டயம் கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் உள்ள குடும்ப பெண்களை குழுக்களாக இணைத்து அவர்களுக்கு கடன் வழங்கி அதனை வாரம் தோறும் வசூல் செய்து வந்துள்ளார், தற்போது கொரோனா ஊரடங்கினாள் கொடைக்கானலில் சுற்றுலா தொழில் முற்றிலும் முடங்கியுள்ள நிலையில் கடந்த நாட்களில் கட்ட தவறிய கடனுக்கு அதிக வட்டியினை கட்டச்சொல்லி மிரட்டிய ஊழியர்கள்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முறையான பாதுகாப்பு இல்லாமல் காலை வேளையில் சுமார் 15 க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து கூட்டம் கூட்டி கடன் வசூல் செய்து வந்தனர், அதிக வட்டி தங்களால் கட்ட முடியாது என வாக்குவாதம் செய்த பெண்களை போராட்டம் நடத்த வேண்டுமானால் சாலையில் அமர்ந்து போராடுங்கள் என திமிராக பேசியதனியார் கடன் நிறுவனமான கிராமின்கோட்ட ஊழியர்கள் தினேஷ் மற்றும் திவாகர் ஆகியோரின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது
தேனி மாவட்டத்தில் இருந்து கொடைக்கானலுக்கு epass இல்லாமல் வந்து பாதுகாப்பற்ற முறையில் பெண்களை வைத்து கூட்டம் நடத்தியது தொடர்பாக கேள்வி கேட்டபோது காமிராவினை ஆப் செய்தல் பேசுவதாக கூறிய நபர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்தனர்
கொடைக்கானலில் சமீப கலக்கமாக நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்று பரப்பும் விதமாக செயல்பட்ட தனியார் கடன் நிறுவனமான கிராமின்கோட்ட ஊழியர்கள் தினேஷ் மற்றும் திவாகர் ஆகியோர் மீதும் நிறுவனத்தின் மீதும் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

Show More
Back to top button