கொரோனாவது கிரானாவது மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் அதிமுகாவினர்

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கி வருவதை உணர்ந்து நமது அரசு சிறப்பான பல்வேறு வகையான தீவிர நடவடிக்கைகள் எடுத்து தமிழக மக்களை காப்பாற்ற துடித்து வருகிறது இதன் ஒருபகுதியாக மக்கள் அதிகம் கூடும் வாரச்சந்தை மதுரை காளவாசல் பொன்மேனி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மார்க்கெட் போட வந்தவர்களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நீங்கள் சந்தை போடாதீர்கள் அடுத்த வாரம் கழித்து போட்டுக்கொள்ளளாலாம் என்று மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மக்களின் நலன் கருதி கூறி வருகின்றனர் இதனை ஏற்றுக் கொண்ட வியாபாரிகள் பலர் கடை போடாமல் அரசு உத்திரவை மதித்து சென்று விட்டனர் ஆனால் பொன்மேனி பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் பொன்மேனி சரவணன் என்ற நபர் மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டுவதோடு கொரானோ கரானோ என்று எங்களை மிரட்டாதீர்கள் என்று பைபாஸ் ரோட்டில் லதா ஸ்டோர் வாசலில் அனுமதி இல்லாமல் தர்பூசணி விற்பனை செய்யும் ரவுடிகளை வைத்து மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டி விரட்டி அடித்தனர் இதனால் பொன்மேனி பகுதியில் பரபரப்ப



