திருவள்ளூர்

சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசளிப்பு விழா

சர்வதேச பால் தினத்தையொட்டி : சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசளிப்பு விழா:__________________________ திருவள்ளூர், ஜூன் 1- சர்வதேச பால்தினத்தையொட்டி : காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் கடம்பத்தூர் ஒன்றியம், விடையூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பால் உற்பத்தியாளர்களான தனலட்சுமி, உஷா, குப்பம்மாள் ஆகியோருக்கும், கால்நடை பராமரிப்பாளர்களான ரஞ்சிதம், அலமேலு, தேவி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் பெருந்தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். இந்த விழாவில், ஆவின் பொது மேலாளர் ஏ.பி.நடராஜன் துணை பதிவாளர் ஶ்ரீகலா, ஆவின் மேலாளர் டாக்டர் உமாசங்கர், பால் உற்பத்தி மேலாளர் டாக்டர் அனீஸ் ஆனந்த் பால், மேலாளர்கள் வெங்கடேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பசும்பொன் ராஜா, விரிவாக்க அலுவலர் சிவஞானம், முதுநிலை ஆய்வாளர் மதன்குமார், பால் பத உதவியாளர் ஜோபின் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விடையூர் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் எம்.காமாட்சி நன்றி கூறினார்.

Show More

Related Articles

Back to top button