திருவள்ளூர்மாவட்டம்

ஆவடியில் கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்த போது பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் கைது

கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்த போது பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

ஆவடி அடுத்த மோரை நியூ காலனியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). இவர் கிறிஸ்தவ மத போதகர். இவர், இதே பகுதி, திருமலை நகரில் சர்ச் நடத்தி வருகிறார். இதற்கிடையில், கடந்த 6மாதத்திற்கு முன்பு இருவருக்கும், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு, சாலோம்  நகரைச் சார்ந்த 48வயது உடைய பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார். மேலும், அவர் பெண்ணிடம் எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கஷ்டம் தீரும் என கூறி உள்ளார். இதனையடுத்து, கடந்த 17ந்தேதி பெண் திருமலை நகரில் உள்ள சர்ச்சுக்கு தனியாக சென்று உள்ளார். அங்கு, அவர் முட்டி போட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளார். அப்போது, அங்கு இருந்த ஸ்காட் டேவிட், அவரை பின்னால் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு அலறியுள்ளார். அதன் பிறகு, அந்த பெண் அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். மேலும், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் மத போதகர் ஸ்காட் டேவிட்டை இன்று காலை கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 
நீதிபதி உத்தரவின் பேரில் ஸ்காட் டேவிட்டை  திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்த போது பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button