சென்னைமாநிலம்

ரஜினிகாந்த் அரசியல் வரவினால் அதிமுக விற்கு எந்த பாதிப்பும் இல்லை

ரஜினிகாந்த் அரசியல் வரவினால் அதிமுக விற்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ‘பிளாக்கிங்” என்ற பெயரில் தன்னார்வலர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒட்டுமொத்த குப்பையை சேகரித்து நகரை தூய்மைப்படுத்தும் பணியை ஆவடி மாநகராட்சி  ஈடுபட்டு வருகிறது. இதில் ஆவடி எம்எல்ஏ வும்,அமைச்சருமான பாண்டியராஜன் கலந்து கொண்டு தூய்மை பணிகளை தூக்கிவைத்து பொதுமக்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்திந்த அவர்

ரஜினிகாந்த் கூறியுள்ள ஆட்சி தலைமை கட்சி தலைமை என்பது ஏற்கெனவே அதிமுகவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் ஒரு செயல் பாடுதான்.ரஜினியின் இந்த கருத்து மக்களை திசை திருப்பும் செயலக இருக்கிறது.ரஜினிகாந்த் அரசியல் வரவினால் அதிமுகாவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என  தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button