எல்லோரும் மாஸ்க் அணிவது கட்டாயமா

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், மக்கள் எல்லோரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே மாஸ்க் வாங்குவதற்கு மக்கள் அக்கறை செலுத்துவதால் அதற்கும், சானிட்டைசர்களுக்கும் கிராக்கி நிலவுகிறது.
மாஸ்க் அணிந்து கொண்டு சென்றால் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்ற கருத்து சமூகத்தில் காணப்படுகிறது.
இந்த நிலையில், யாரெல்லாம் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்ற விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதன் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது-
எல்லோரும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. 3 பிரிவினர் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும். அவர்கள் யாரென்றால்….
1. சளி, இருமல், காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உடையவர்கள்.
2. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள்.
3. நோயாளிகளை கவனிக்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகிய இந்த 3 தரப்பினர் மட்டுமே கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.



