மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆயிரம் பரிசுத் தொகை

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆயிரம் பரிசுத் தொகை கொண்ட பொற்கிழி தொகுப்பு பையை மாவட்ட செயலாளர் வழங்கினார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டத் திமுக முப்பெரும் விழா கடந்த வாரம் நடைபெற்றது.அதில் கட்சியின் மூத்த உறுப்பினர்களை கவுரவிக்கும் வகையில்
500 க்கும் மேற்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் பரிசுத் தொகை கொண்ட பொற்கிழி தொகுப்பு பை வழங்கப்பட்டது. இதேபோல் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு திமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி.நாசர் வீடு தேடி பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார். அந்தவகையில்
திருமுல்லைவாயில், காலனியில் மாற்றுத்திறனாளியான கட்சி உறுப்பினர் மணி என்பவருக்கு திமுக மாவட்ட செயலாளர் நாசர் பொற்கிழி பரிசு தொகுப்பை வழங்கினார்.இந்த நிகழ்வின் போது
மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் ,நகர செயலாளர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் பேபி சேகர் ,வட்டச் செயலாளர் உதயகுமார் உட்பட திமுக கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



