மாநிலம்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

ஜுன்-1ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ள தமிழக அரசு வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்வை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கவேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மேலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் மனநிலை மற்றும் பெற்றோரின் கவலை
கொரோனா பதித்த ஒரு மாணவன் தேர்வு மையத்திற்கு வருவாரேயானால் அந்த ஒரு மாணவன் மூலம் ஒரு தேர்வு மையத்தில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவர்.
இத்தனை நாள் தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து வைத்திருந்து தேர்வு எழுத அனுப்பி கொரோனா பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சமும் அதன் மூலம் ஊர் முழுவதும் பரவும் என்றும் கவலையும் ஏற்படும்.

மத்திய அரசு பள்ளிகளில் தேர்வுகள் ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. அது போல் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு கட்டுக்குள் வந்த பிறகே தேர்வு நடத்துதல் வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் வேண்டுகோளாக வைக்கிறோம் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button